சீனி மற்றும்பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களின் ஊடாக மாத்திரம் குறைந்த விலையில் பருப்பு மற்றும் சீனியை கொள்வனவு செய்வதற்கு நுகர்வோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த நிவாரணங்களை ஒரு மாதத்திற்குள் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர் ஒரு கிலோகிராம் பருப்பு 175 ரூபாவுக்கும் ஒரு கிலோ கிராம் சீனி 110 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.



