யாழ் பல்கலைகழக விடுதியில் தங்கியிருந்த மூன்று மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த விடுதியிலுள்ள யாழ் மாவட்ட மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ் பல்கலைக்கழக கோண்டாவில் விடுதியில் 200 பேர் வரையிலான மாணவர்கள் தங்கியிருந்தனர்
இந்நிலையில் அவர்களுள் 3 நபர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் சிலருக்கு மீள் தொற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களுடன் மிகவும் நெருங்கி பழகியவர்கள் மாத்திரம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அந்த விடுதியில் இருந்த யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்தும் விடுதியிலேயே தங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



