திம்புள்ள வாகன விபத்தில் இருவர் படுகாயம்.

0

திம்புள்ள – பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டைகளை ரொசிட பன்னைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவமானது கொட்டகலை நகரில் இருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாரான சிற்றுந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து உந்துருளி ஒன்றுடன் மோதியதிலே பதிவாகியுள்ளது.

அத்துடன் குறித்த விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்த இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

மேலும் குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply