யாழ்ப்பாணம் அனலைதீவிற்கு அப்பால் உள்ள கடற்பரப்பு பகுதியில் 103 மில்லியன் ரூபாக்கும் அதிக பெறுமதியான 344 கிலோ 550 கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இதற்கமைய குறித்த கடற் பிராந்தியத்தில் இன்றைய தினம் அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 11 பொதிகளில் குறித்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை யினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 34 முதல் 38 வயதிற்கு இடைப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இலுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் நாச்சிக்குடா மன்னர் மற்றும் யாழ்ப்பாணம் – குருநாகல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது இவ்வாறு செய்யப்பட்ட கேரள கஞ்சா மற்றும் இழுவைப் படகுடன் சந்தேக நபர்களை காங்கேசந்துறை காவல்துறையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



