மின்னல் தாக்கி 28 பேர் உயிரிழப்பு!

0

வட இந்தியாவில் பல பாகங்களிலும் கன மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்கின்றது.

இவற்றுள் ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் கன மழையை தொடர்ந்து ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 10 ஆடுகள், ஒரு பசு என மொத்தமகா 13 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன

இவற்றில் 18 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்களில் ஒரு குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

மேலும் ஜெய்ப்பூரில் ஆம்பர் கோட்டை அருகே மலைப்பகுதியில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தவர்களும் இவற்றில் உள்ளடங்குகின்றனர்.

இவற்றைவிட 6 குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் உத்தரப் பிரதேசத்தில் பல பகுதிகளில் பெய்த கன மழையினால் சிக்கி இரண்டு இளைஞர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர உத்தரகாண்டில் மழைக்கு 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply