நாடு பூராவும் மக்களின் பாதுகாப்பு தேவை கருதி தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கண்டி மாவட்டத்தின் பன்விலை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிற்குட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடானது இன்று காலை 9 மணி முதல் பன்விலை இராஜசிங்கம் மத்திய கல்லூரி , உளு கங்கை கொஸ்கம சிங்கள பாடசாலை, கலாபொக்க அபிராமி தமிழ் மகா வித்தியாலயம் போன்ற மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பன்விலை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிற்குப் பொறுப்பான அதிகாரிதெரிவித்துள்ளார்.



