தற்போது மலைநாட்டில் பெய்து வரும் அடை மழை காரணத்தினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ஒரு வான் கதவு இன்றைய தினம் அதிகாலை திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் மேலும் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டன.
மேலும் மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்று பகுதியை பயன்படுத்துபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



