ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

0

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணத்தினால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி யட்டிபேரிய பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன் காரணத்தினால் மாற்று வீதியை பயன்படுத்துமாறு காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் குறித்த வீதியை சீரமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply