கேரள மாநிலத்தில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு!

0

கேரள மாநிலத்தில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரிப்பினால் ஏப்ரல் மாதம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கொவிட் தொற்று விகிதம் படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

இந்நிலையில் வார நாட்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் பஸ் வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவில்கள் உட்பட வழிபாட்டுத்தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படவுள்ளது.

இதன் பிரகாரம் கேரளாவில் இன்றும்(சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) வார இறுதி நாட்களில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமுல் படுத்தப்படுகிறது.

மேலும் முழு ஊரடங்கையொட்டி அரசு தனியார் பஸ் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

அத்துடன் மருந்து கடைகள் வணிக நிறுவனங்கள் வங்கிகள் நிதி நிறுவனங்கள் இயங்காது என அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply