இன்று முதல் மன்னாரில் பைசர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஆரம்பம்!

0

நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் மன்னாரில் இன்று முதல் பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தடுப்பூசிகள் செலுத்துவதற்கு 30 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் தலைமன்னார் ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் புனித லோரன்ஸ் தேவாலயம் என்பவற்றிலும் இந்த தடுப்பூசி ஏறும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply