இன்று ஒரு தொகை அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள்
இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் தங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுக்கு செலுத்துவதற்காகவே சுமார் 350 தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
இருப்பினும் நாட்டிற்கு கிடைக்கவேண்டிய அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



