கட்டுநாயக்க விமான நிலையத்தில்
பயணிகளுக்காக பிரத்தியேக கொவிட் 19 பரிசோதனைக் கூடத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை கூடத்தை அமைத்து மூன்று மணித்தியாலங்களுக்குள் பரிசோதனை முடிவை பெற்றுக் கொடுப்பது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் முதல் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கலிற்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் தடுப்பூசி வழங்கிய பின்னர் சலுகை அடிப்படையில் சுற்றுலா பயணிகள் நாட்டில் அழைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



