சென்னையில் தடுப்பூசிகள் போடும் முகாம்கள் திடீரென மூடப்பட்டுள்ளன!

0

கொவிட் 2 வது அலை தாக்கத்தின் பின்னர் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் மத்திய அரசு போதுமான அளவு தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யாததின் காரணத்தினால் இந்த தடுப்பூசி போடும் முகாம்கள் மூடப்பட்டுள்ளன.

குறைந்த அளவில் இருந்த தடுப்பூசிகள் மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.

இதற்கமைய சென்னையில் 64 மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

அத்துடன் சிலர் ஆன்லைன் வழியாக முன் பதிவினை மேற்கொண்டு பொதுமக்கள் காத்து நிற்காமல் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து தடுப்பூசியைப் போட்டுச் சென்றனர்.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறையின் காரணத்தினால் ஆன்லைன் முன்பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு தடுப்பூசி போட நேரில் சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

அத்துடன் மத்திய அரசு குறித்த தடுப்பூசிகளை வருகின்ற 11ம் திகதி அடுத்த கட்டமாக வழங்குவதாக அறிவித்துள்ளது .

இருப்பினும் தமிழகம் முழுவதும் தடுப்பூசியின் தட்டுப்பாடு காரணத்தினால் தடுப்பூசி செலுத்தும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply