விவசாய போதனாசிரியர் ஒருவரும், விவசாயத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஒருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த நபர்கள் இருவரும் கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒருதொகை பாக்குகள் தொடர்பில் போலியான முறையில் தயாரிக்கப்பட்ட தனிமைப்படுத்துதல் சான்றிதழை வழங்கியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்தினை காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.



