இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் பிரிவு கூட்டம் நேற்றைய தினம் கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின் போதே தயாசிறி ஜயசேகர இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறுக்கீடு செய்து கருத்துக்களை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தஸநாயக்க, இராஜாங்க அமைச்சர் தயாசிறி அண்மையில் வெளியிட்ட கருத்தினால் பெரியளவிலான கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் கிராமப்புறங்களில் மக்கள் நினைக்கின்ற விடயத்தையே தாம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



