ஒரு வாரத்திற்கு மேல் காணாமல் போயிருந்த நெடுந்தீவு மீனவர் தமிழகம் வேதாரணியம் கடற்பரப்பில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தமிழகஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய நெடுந்தீவு எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வ ஸ்டார் மரியதாஸ் என்ற மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த முதலாம் திகதி வியாழக்கிழமையன்று நெடுந்தீவு கடற்கரையிலிருந்து கட்டு மரம் ஒன்றிலிருந்த அவர் தொழிலுக்கு சென்றுள்ளார்.
இருப்பினும் அவர் கடந்த ஒரு வார காலமாக கரையொதுங்கவில்லை என குடும்பத்தினர் காவல்துறையினருக்கு முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அவரின் சடலம் தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



