இலங்கையின் முக்கிய இருதய சத்திரசிகிச்சை நிபுணர் பணியிலிருந்து இடைநீக்கம்?

0

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் வைத்திய நிபுணரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி அறிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணையின் முதல் நடவடிக்கையாக இந்த நபர் பணியிலிருந்து இடைநிறுத்த செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட கடற்படை வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை பணியாளராக பணியாற்றி வந்த லெப்டினன்ட் கமாண்டர் தர அதிகாரிகள் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply