தற்போது நாட்டில் நிலவும் கொவிட் நிலைமை அச்சுறுத்தல் காரணத்தினாலே நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு ஆலய அறங்காவலர் சபையினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நயினை அம்பாள் பக்தர்களுக்கு இந்த விடயம் பெரிதும் கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய அறங்காவலர் சபை விடுத்துள்ள அறிவித்தலில், சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் மட்டுமே அம்பாளிற்கு நித்திய பூஜைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் அடியவர்களின் நேர்த்திகள், அபிசேகங்கள் என்பன தற்காலிகமாக இடைநிறுத்தப்படுள்ளன.
நாட்டின் சூழ்நிலை வழமைக்கு திரும்பி நேர்த்திகள் மீள ஆரம்பிக்கும் போது அடியவர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்கப்படும்.
ஆகவே பொது மக்கள் அனைவரும் நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு அம்பாளை வேண்டிக்கொள்ளுங்கள் என ஆலய அறங்காவலர் சபையினர் குறிப்பிட்டிருந்தனர்.



