பேராபத்தில் மூழ்கும் இலங்கை!

0

இலங்கையில் தற்போது கொவிட் தொற்றின் ஆபத்தான டெல்டா மாறுபாடு சமூக மட்டத்தில் பரவி வருவதினால் பொது மக்கள் அனைவரும் முறையான சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் கடைப்பிடிப்பது அவசியம் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பொதுமக்கள் சுகாதர பிரிவினரால் விதிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால் நான்காவது அலை எதிர்வரும் 10 வாரங்களில் இலங்கையில் ஏற்பட்டு பாரிய நெருக்கடியான சூழலுக்குள் தள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெல்டா தொற்றாளர்கள் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய வைரஸ் போன்று டெல்டா பரவினால் மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டு விடும்.

ஆகவே இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு க எடுக்க வேண்டிய ஒரே நடவடிக்கையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

இயன்றளவு மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து தேவையற்ற பயணங்களை முடிந்தளவு குறைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் நாட்டில் வைரஸ் வேகமாக பரவினாலும் மக்கள் உரிய சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றி செயற்பட்டால் நாம் இலகுவாக இந்த வைரஸ்ஸை வெற்றி கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply