தமிழகத்தில் 5 நாட்களுக்கு தொடர்ந்து கன மழை-மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

0

வளிமண்டல மேலோடு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணத்தினால் சேலம்,தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ராணிப்பேட்டை,காஞ்சிபுரம், வேலூர் கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளைய தினம் சேலம், தர்மபுரி கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,வேலூர்,கிருஷ்ணகிரி, தேனி,திண்டுக்கல்,மதுரை, திருப்பூர் கோவை, ஈரோடு,விழுப்புரம்,கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 4ஆம் திகதி சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விலுபுரம்,கடலூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் கன மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

அவ்வாறு 5ஆம் திகதி வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் குறித்த கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் 6ஆம் திகதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.

தற்போது சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply