மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதிதாக திறக்கப்பட்ட கொவிட் 19 சிகிச்சை நிலையம்!

0

கொவிட் தொற்றுப் பரவல் அதிகரிப்பதனை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மற்றுமொருபுதிய கொவிட் 19 சிகிச்சை நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது கொவிட் 19 சிகிச்சை நிலையமாக குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் இந்த சிகிச்சை நிலையத்தில் 50 பேர் வரையில் தங்கி சிகிச்சை பெற முடியும் என்பதுடன் குறித்த சிகிச்சை நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தௌபீக் வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply