போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவத்தில் 36 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 120 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 400 மில்லிகிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதான நபரை நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்காகன நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



