நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மேலும் 1,701 பேர் இவ்வாறு குணமடைந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 229,541 ஆக அதிகரித்துள்ளது.



