திருமலை வேங்கடவனை தரிசனம் செய்யும் முறை..!

0

நமது பாரத நாட்டில் உள்ள சுயம்பு மூர்த்த திருத்தலங்களில் `வேங்கடாத்ரி’ எனப்படும் திருமலை திருப்பதி பக்தர்களின் மனம் கவர்ந்த ஒன்றாகும். அங்கு இறைவன் சிலை வடிவமாக நின்ற கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் செய்கிறார். `திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நேரும்..’ என்ற சொல் வழக்கு பக்தர்களிடையே பிரபலமானது. பொதுவாக, திருப்பதி செல்பவர்கள் மலை ஏறியவுடன் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொள்வதும், அவரை தரிசித்துவிட்டு உடனடியாக வீடு திரும்புவதும் சாஸ்திர சம்மதமானதாக கருதப்படவில்லை. அதற்காக ஆன்றோர்களால் வரையறை செய்யப்பட்ட ஒரு தனிப்பட்ட மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவற்றை பற்றிய குறிப்பை இங்கே காணலாம்.

முதலில் கீழ் திருப்பதியில் வீற்றிருக்கும் கோவிந்த ராஜ பெருமாளை வணங்க வேண்டும்.

அதன் பிறகு, அலர்மேல் மங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசி த்து மனமும், இதயமும் ஒருங்கே இணைத்து வணங்க வேண்டும்.

அதன் பிறகு, திருமலையின் மீது ஏறிய பிறகு `வராக தீர்த்த கரையில்’ கோவில் கொண்டிருக்கும் `வராக மூர்த்தியை’ தரிசித்து வணங்க வேண்டும்.

அதற்கு பிறகுதான் மலையப்பன் என்றும், ஏழுமலை வாசன் என்றும் சொல்லப்படும் திருவேங்கடவனை வழிபட வேண்டும்.

மேற்கண்ட வழிமுறையானது ராமானுஜர் காலத்தில் அவரால் தொடங்கப்பட்டது ஆகும். அவருக்கு பின்னர், வந்த அனைத்து ஆச்சாரியர்களும் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயம் இதுவாகும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply