விகாரி வருட முதல் பிரதோஷம்; தடைகள் உடையும்; கடனெல்லாம் தீரும்!

0

விகாரி வருடம் பிறந்து முதல் பிரதோஷம் இன்று (17.4.19). எனவே இன்று , மறக்காமல் சிவ தரிசனம் செய்யுங்கள். சகல யோகமும் ஐஸ்வர்யமும் கிடைக்கப்பெறுவீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஒவ்வொரு சித்திரை மாதமும் தமிழ் வருடம் பிறக்கும். தமிழில் மொத்தம் அறுபது வருடங்கள். தற்போது சித்திரை மாதப் பிறப்பான, ஏப்ரல் 14ம் தேதி, விகாரி வருடம் தொடங்கியிருக்கிறது.

விகாரி வருடம் தொடங்கிய பிறகு, வருகிற முதல் பிரதோஷம்… இன்று (17.4.19). இந்தநாளில், மறக்காமல் சிவதரிசனம் செய்யுங்கள்.

இன்று புதன்கிழமை மாலையில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ காலம். எனவே அந்த சமயத்தில், சிவபெருமானுக்கும் அதாவது சிவலிங்கத் திருமேனிக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ அலங்காரங்கள், பூஜைகள் நடைபெறும்.

இதில் கலந்துகொண்டு தரிசியுங்கள். அதேபோல், நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். சிவலிங்கத் திருமேனிக்கு வில்வம் வழங்குங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள்.

மேலும் அபிஷேகத்துக்கு, பால், தயிர், நெய், பன்னீர், தேன், அரிசிமாவு என உங்களால் முடிந்த அளவு அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல் என நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்வதும் சிறப்பு வாய்ந்தது.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமையில், விகாரி வருடத்தின் முதல் பிரதோஷம் வருகிறது. இந்தநாளில், சிவதரிசனம் செய்யுங்கள். மாலையில் வீட்டில் விளக்கேற்றி, சிவனாரை பூஜியுங்கள். லிங்காஷ்டமம் படிக்கலாம். ருத்ரம் பாராயணம் செய்யலாம்.

இதனால், சகல யோகங்களும் கிடைக்கப்பெறுவீர்கள். எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைப்பது உறுதி. கடன் தொல்லையில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் விடுபடுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்தும் சீரும்சிறப்புமாக நடைபெறும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply