முருகக் கடவுளின் விஸ்வரூப மகிமை பற்றி தெரியுமா..?

0

ஓங்கார ஸ்ரூபமாக உள்ள நமது ஞான ஸ்கந்த ஸ்வாமிநாதன் பல திருவுருவம் எடுத்து பல லீலா விநோதங்கள் நிகழ்த்தியுள்ளார். அவற்றில் சூரபத்மனுக்கு தனது விஸ்வரூபத்தை காண்பித்தது தான் மிகவும் பிரமிக்க வைக்கும் விஷயமாகும். இவ்விஷயத்தை ஸ்கந்த புராணம், சங்கர சம்ஹிதை மற்றும் சிவரஹசிய கண்டம் ஆகியவற்றிலிருந்து நாம் அறியலாம். போரின்போது சூரபத்மன் பலப்பல மாய வடிவங்கள் எடுத்து யுத்தம் செய்தான். குமாரக் கடவுளாம் ஆதிபகவன், அவன் செய்கையைத் திருநோக்கஞ் செய்து புன்சிரிப்பு உதிர்த்தார். ஆயிரங்கோடி எண்ணிக்கைக் கொண்ட கொடும் பாணங்களைப் பொழிந்தார்.

அவையெல்லாம் துராத்மாவாகிய சூரபத்மன் கொண்ட மாயவுருவங்களை எல்லாம் ஓர் இமைப் பொழுதினில் அழித்து, குமாரக்கடவுள்பாற் திரும்பச் சென்றன. அப்போது சூரபத்மன் மாத்திரம் நின்றான். அதனைக் கண்ட முருகப்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். “அசுரனே நீ கொண்ட மாயவடிவங்களை எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் அழித்தேன். இப்பொழுது எனது வடிவத்தையும் சிறிது காட்டுகிறேன். ஆனால், உனது ஊனக் கண்ணால் காண இயலாது. ஆகவே நான் உனக்கு ஞானக் கண்ணை அருளுகிறேன்” என்று கூறி ஸ்ரீபரமேஸ்வரரூபம் என்னும் விஸ்வ ரூபத்தைக் காட்டியருளினார்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply