‘விகாரி’ வருடம் 14 ஆம் திகதி ஞாயிறு பிப.1.12இல் பிறக்கிறது!

0

தமிழர்களின் 60வருட சுற்று வட்டத்தின் 33வது வருடமாகிய புதிய விகாரி தமிழ் வருடப்பிறப்பு வாக்கியப் பஞ்சாங்கப்படி ஏப்ரல் 14ஆம் திகதி (சித்திரை -01) ஞாயிற்றுக்கிழமை பிப 1.12மணிக்கு உதயமாகிறது.

ஞாயிறு மு.ப.9.12மணிமுதல் பிப 5.12மணிவரை விஷூ புண்ணியகாலமாகும். இக்காலப்பகுதியில் சிரசில் ஆலிலையும் காலில் இலவமிலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம் செய்து வழிபட வேண்டும்.

வெள்ளை நிறப்பட்டாடை அல்லது வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.

திருக்கணித பஞ்சாங்கம்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி புதுவருடம் 14ஆம் திகதி பிப 2.09மணிக்குப் பிறக்கிறது. ஞாயிறு மு.ப.9.12மணிமுதல் பிப 5.12மணிவரை விஷூ புண்ணியகாலமாகும்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி புதுவருடம் 14ஆம் திகதி பிப 2.09மணிக்குப் பிறக்கிறது. ஞாயிறு மு.ப.10.09மணி முதல் பிப 06.09மணி வரை விஷூ புண்ணியகாலமாகும். இக்காலப்பகுதியில் சிரசில் இலவமிலையும் காலில் விளா இலையும் வைத்து மருத்துநீர் தேய்த்து ஸ்ஞானம் செய்து வழிபட வேண்டும். வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.

கை விசேசம் விஷூ புண்ணிய காலத்திலும் செய்யலாம்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply