சண்ட பைரவர் காயத்ரி மந்திரம்

0

பக்தர்களால் அதிகம் வழிபடப்படும் பைரவ மூர்த்திகளில் சண்ட பைரவருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகள் தொல்லை, சொத்து பிரச்சனைகள் தீரும்.

ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத்

பக்தர்களால் அதிகம் வழிபடப்படும் பைரவ மூர்த்திகளில் சண்ட பைரவருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் மனதில் பைரவரை நினைத்து 27 முறை துதித்து வருவது சிறப்பு. மாதத்தில் செவ்வாய்கிழமை வருகிற தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவரின் சந்நிதியில் பைரவருக்கு செவ்வரளி பூக்களை சாற்றி, செவ்வாழைப்பழங்களை நிவேதனம் செய்து, விளக்கெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற துஷ்ட சக்தி மற்றும் மாந்திரீக ஏவல்களால் ஏற்படுகின்ற பாதிப்புகள் நீங்கும். எதிரிகள் தொல்லை ஒழியும். வீடு, நிலம் போன்ற சொத்துகளில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்ந்து உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply