ஆலயத்தில் நமது பெயரில் அர்ச்சனை செய்வது நல்லதா?

0

கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் போது நமது பெயருக்கு செய்வது நல்லதா, இறைவன் பெயரில் செய்வது நல்லதா, என்ற குழப்பம் நிறைய பக்தர்களுக்கு உண்டு.

அர்ச்சனை என்பது நம்மைப் படைத்த இறைவனின் புகழை மனதார, வாயார பாடுவதாகும். அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் முறையிடுவது தான் அர்ச்சனை செய்வதன் தாத்பரியம்.

நாம் கடவுளிடம் ஏதாவது கோரிக்கை வைத்து, அது நிறைவேறி விட்டால் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கடவுள் பெயரில் அர்ச்சனை செய்வோரும் உண்டு.

கடவுளிடம் இந்த நபருக்கு இந்த கோரிக்கை நிறைவேற வேண்டுமென்று, அந்த நபரின் பெயரில் அர்ச்சனை செய்வோரும் உண்டு.

கடவுளுக்கு எதிரே நாம் போய் நின்றாலே, நமக்கு என்ன பிரச்சனை என்று கடவுள் ஸ்கேன் செய்த விடுவார். அப்படி இருக்க நாம் ஏன் நமது பெயரில் அர்ச்சனை செய்யவேண்டும். கடவுள் பெயரில் அர்ச்சனை செய்தால் அவரே நம்மைப் பார்த்துக் கொள்வார்.

எனவே பொதுவாக அவர் பெயரிலேயே செய்து விடுவது தான் சாலச்சிறந்தது ஆகும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply