உடனே பதவி உயர்வு கிடைக்க வழிபட வேண்டிய கோவில்..!

0

சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது திருபுள்ளம்பூதங்குடி அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில். பொதுவாக ராமர் கோயில்களில் ராமர் நின்ற கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இந்த வல்வில் ராமர் கோயிலில் ராமர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். இவர் கிழக்கு திசை நோக்கி புஜங்க சயன கோலத்தில் சோபன விமானத்தின் கீழ் சயனித்தவாறு பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

நவகிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய பரிகார கோயிலாக வல்வில் ராமன் கோயில் இருக்கிறது. திருமண தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட திருமண தடை நீங்கும். வேலைகளில் இருப்பவர்கள் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க இக்கோயிலில் இருக்கும் நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் பதவி, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெறுவர்கள் என்பது பக்தர்களின் வாக்காக இருக்கிறது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply