சிவனை வழிபடும் போது இதனை மறக்காதீர்கள்..!

0

சிவனை வழிபட எத்தனையோ வழி முறைகள் இருக்கலாம். ஆனால் வில்வ இலை கொண்டு சிவனை அர்ச்சித்து வணங்கும் போது கிடைக்கும் பலன்கள் அளவிடற்கரியது. அர்ச்சிக்கும் போது வில்வ இலைகளை மும்மூன்று இலை உள்ளதாக அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் கையில் இருந்து வில்வம் தோன்றியதால், ஒவ்வொரு வில்வத்திலும் லட்சுமி இருப்பதாக ஐதீகம்.

வில்வ இலைகளை அதிகாலையில் தான் பறிக்க வேண்டும். மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாட்களில் வில்வத்தை பறிக்கக்கூடாது. வில்வம் கிடைக்காவிட்டால் முதல் நாள் சாத்திய வில்வத்தை தண்ணீரால் சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம்.

சூரிய உதயத்துக்கு முன் மிளகுடன் சேர்த்து வில்வத்தை சாப்பிட்டால் உடல் நலமாகும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply