சிவபெருமானின் வாகனமான நந்தி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

0

சிவபெருமான் வீற்றிருக்கும் புனித ஸ்தலம் கயிலாய மலை. இந்த மலையின் காவலனாக விளங்குகிறார் நந்தியம்பெருமான். எருது வாகனமாக இருக்கும் அவர், சிவபெருமானின் சேவகர்களில் தலைமையானவர்.

வெள்ளை நிறம் கொண்ட அவர், தூய்மைக்கும், அறத்திற்கும் உரியவர் ஆவார். சிவபெருமானின் வாகனமாக நந்தி விளங்குகிறார். கயிலை மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை யார் ஒருவர் பார்க்க வேண்டும் என்றாலும், அதற்கான முன் அனுமதியை நந்தியிடம் பெற வேண்டியது அவசியம்.

அந்த முறை தான், தற்போது கோவில்களிலும் உள்ளது. சிவபெருமானை வழிபடுவதற்கு முன்பாக நந்தி வைக்கப்பட்டிருப்பதன் காரணம் இது தான். நந்தியை வழிபட்டு அனுமதி வாங்கிய பிறகே, கருவறையில் இருக்கும் சிவபெருமானை தரிசிக்கச் செல்ல வேண்டும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply