சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பானது ஏன் தெரியமா..?

0

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷ வழிபாடு. ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும். சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது. அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியால், சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர். இந்த தவறை பிரம்மன் எடுத்துரைத்தார். வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் சிவபெருமானை தரிசித்து மன்னிப்பு கோரினர்.

மகிழ்ச்சி அடைந்த ஈசன், திருநடனம் புரிந்தார். நந்தி தேவர் சுத்த மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் கண்டுகளித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர். ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் சனிக்கிழமை. எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்று சிவன் ஆலத்திற்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்தால் 5 வருடம் ஆலயம் சென்ற பலன் கிட்டும். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply