காரியத் தடைகள் நீங்க தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

0

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் பூஜையறையில் கூறி வர சர்வ காரியங்களிலும் ஏற்படும் தடைகள் நீங்கும். வெற்றி கிடைக்கும்.

காரியத் தடைகள் நீங்க ஸ்லோகம்
சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு: குசல: ஸ்பந்திது மபி:
அதஸ்த்வா மாராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய
ப்ரபவதி ஸௌந்தர்யலஹரி ஸ்லோகம்

பொதுப் பொருள்:

மங்கள மூர்த்தியான மகாதேவன் பராசக்தியாகிய உன்னுடன் கூடியவராக இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை ஆக்குவதற்கு திறமையுடையவர் ஆகிறார். அவ்வாறு கூடியில்லா விட்டால் அவரால் அசைவதற்குக் கூட திறமை இருப்பதில்லையே? ஆகையால், விஷ்ணு, ருத்ரன், பிரம்மா முதலியவர்களாலும் பூஜித்தற்குரிய உன்னை புண்ணியம் செய்யாதவர்கள் வணங்குவதற்கோ அல்லது துதிப்பதற்கோ எங்கனம் முடியும் தாயே?- Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply