வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வழிபாடு..!

0

வருடத்திற்கு ஒரு முறையாவது மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்து குலதெய்வத்தை வழிபடுவதால் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கும் உங்கள் பரம்பரைக்கும் எப்போதும் இருக்கும்.

குலதெய்வத்திற்கு மாவிளக்கு பரிகாரம்
நமது பாரம்பரிய மத சடங்குகள் மற்றும் வழிபட்டு முறைகளில் தீபம் ஏற்றுவது என்பது தீமைகளை அழிக்கும் இறை சக்தியை அவ்விடத்தில் வரவேற்கும் ஒரு வழிமுறையாகும். இந்த அவ்விடத்தில் வெள்ளி குத்துவிளக்கு, மண் அகல்விளக்கு போன்ற பல வகைகள் பல சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று தான் குலதெய்வம் மற்றும் இன்ன பிற தெய்வங்களின் வழிபாட்டிலும் செய்யப்படும் “மாவிளக்கு”. இந்த மாவிளக்கு பரிகாரம் பற்றியும் அதை ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தெய்வங்களை குறிப்பாக அம்மன் தெய்வங்களை மாவிளக்கு ஏற்றி வழிபட்டு பலன் பெற விரும்புபவர்கள் எந்த தினத்திலும் மாவிளக்கு தயார் செய்து விளக்கேற்றி வழிபடலாம். குலதெய்வ பூஜை செய்து நினைப்பவர்கள். உங்கள் குலதெய்வத்திற்கு மாவிளக்கு பூஜை செய்வதற்கு ஒரு சுப முகூர்த்த தினத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் பாரம்பரிய முறையில் உரலில் பச்சரிசி போட்டு உலக்கையால் குத்தி அரிசி மாவு தயாரிப்பதே சரியான முறையாகும்.

பின்பு அந்த அரிசி மாவிற்கு ஏற்ற அளவில் வெல்ல சர்க்கரை, ஏலக்காய்கள் போன்றவற்றை சேர்த்து அதில் சிறிது பசும் நெய்விட்டு நன்கு மாவாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் குலதெய்வ கோயிலில் தெய்வத்திற்கு முன்பு ஒரு வாழையிலையில் படையல்களை வைத்து பின்பு பிசைந்து கொண்ட மாவை ஒரு விளக்கு போன்று செய்து, அதில் நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி உங்கள் குலதெய்வத்திற்கான பூஜைகள் செய்து வழிபட வேண்டும். வழிபாடு முடிந்ததும் மாவிளக்கை அக்கோவிலிலேயே விட்டு விடலாம் அல்லது பிரசாதமாக அனைவரும் சிறிது சாப்பிடலாம்.

வருடத்திற்கு ஒரு முறையாவது மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்து குலதெய்வத்தை வழிபடுவதால் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கும் உங்கள் பரம்பரைக்கும் எப்போதும் இருக்கும். உங்கள் வம்சத்திற்கு வறிய எப்போதும் ஏற்படாமல் காக்கும். குழந்தைகளின் உடல்நிலை மற்றும் கல்வி திறன் மேம்படும். திருமண தடை, வேலைவாய்ப்பின்மை, தொழில் – வியாபார முடக்கம் போன்ற நிலைகள் அகலும். வாழ்க்கை மேம்பட எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். துஷ்ட சக்திகள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அணுகாமல் காக்கும். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply