இதை படிச்சா மொபைல்போன் பயன்படுத்தவே யோசிப்பீங்க!

0


வெளியில் செல்ல நேர்ந்தால் பெரும்பாலும் பொது கழிப்பிடங்களை பயன்படுத்துவதற்கு நாம் தயங்குவோம், இதற்கு காரணம் சுத்தமாக இருக்காது என்பதே.
சிலர் டாய்லட் சீட்களில் பேப்பரை உபயோகிப்பர். ஆனால் இது மிக தவறானது நோயினை பரப்பக்கூடியது.


பொதுவாக கழிப்பிடங்கள் அனைத்தும் கிருமிகள் பரவாவண்ணமே அமைக்கப்படுகின்றன. எனவே கிருமி தொற்று ஏற்பட்டுவிடும் என நாம் நினைக்க தேவையில்லை.
உடலில் உள்ள கிருமிகள், பாக்டீரியாக்களை அகற்றுவது மிக எளிதே. கைகளை நன்றாக கழுவி துடைத்துவிட்டால் பாக்டீரியாக்கள் பரவாது. ஈரமான இடங்களில் மட்டுமே பாக்டீரியாக்கள், கிருமிகள் எளிதில் பரவும்.


ஃப்ளஸ்(Flush) செய்யும் போது டாய்லட்டினை மூடிவிட்டு செய்வதால் அங்கு கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.


நாம் உபயோகப்படுத்தும் பொது கழிப்பிடங்கள் போன்றவைகளை விட நம்மிடம் உள்ள மொபைல்போனில் 10மடங்கு கிருமிகள் உள்ளது. எனவே மொபைல் போன்களை கட்டாயம் துடைக்கவேண்டும்.


நம் வீட்டு சமையலறை சிங்க்-ல் அதிகளவு கிருமிகள் உண்டாகிறது. எனவே வாரத்திற்கு இருமுறை கட்டாயம் சிங்கினை சுத்தம் செய்யவேண்டும்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply