குறைகளை நீக்கி வளமுடன் வாழ வைக்கும் விநாயகர் வழிபாடு

0

விநாயகர் விரதம்:

விநாயகர் சதுர்த்தியை ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாடி வரும் நாம், வெள்ளி விரதம், செவ்வாய் விரதம் சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், விநாயக நவராத்திரி விரதம் ஆகியவற்றைக் கொண்டாடுவது மிகக் குறைவே. தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விரத நியமிங்களில் குறிப்பிட்டபடி விநாயகர் அருள் தருகின்ற இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குதல் வேண்டும்.

விநாயக விரதத்தைத் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் செய்தல் வேண்டும். அப்படி இயலாதவர்கள் தமிழ் மாதத்தின் முதல் வெள்ளியோ அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையோ ஏற்றுச் செய்யலாம். ஒரு பலனைக் குறித்து முற்காலத்தில் ஆண்களும், பெண்களும் கடைப்பிடித்த இந்த விரதத்தால் பல குடும்பங்களில் கடன் தொல்லைகள் நீங்கி விரைவாகப் பலன் கிடைத்துள்ளது.

ஆழத்து பிள்ளையார்:

விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோவிலின் உள்ளே ஆழத்து விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயில் இருக்கும் ஆழத்து விநாயகர் தரைமட்டத்தில் இருந்து கீழே பள்ளத்தில் இருப்பதால் ஆழத்து விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார். இங்கு உள்ள ஆழத்து விநாயகர் குழந்தை பாக்கியம், சிறந்த கல்வி வழங்குகின்றார். திருமணதடை, 21 பிறவி தோஷங்களை நீக்குகிறார். ஜாதகம் இல்லாதவர்கள் இங்கு வேண்டி வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்க பெறுகின்றனர். சங்கடகர சதுர்த்தி அன்று இவரை வேண்டி வணங்கினால் எல்லா சங்கடங்களும் நீங்கும். – Source: Dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply