
நமது வழிபாடுகளுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக வைரவர் விளங்குகிறார். அவருக்கு உகந்த விரத நாட்கள் எத்தனை என்பதை விரிவாக பார்க்கலாம்.
வைரவருக்கு உகந்த விரத நாட்கள்
பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அறியப்படுகிறார்.
வைரவர் வழிபாட்டுக்கு விரத நாட்கள் மூன்று. அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம்.

செவ்வாய்க்கிழமை விரதம்: தை மாதம், முதல் செவ்வாய்க் கிழமையன்று தொடங்கி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் வைரவரைக் குறித்து விரதம் இருக்க வேண்டும். அப்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.
சித்திரை பரணி விரதம்: சித்திரை மாதப் பரணி நாளன்று வைரவரைக் குறித்து விரதம் இருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.
ஐப்பசி பரணி விரதம்: ஐப்பசி மாதப் பரணி நாளன்று வைரவரைக் குறித்து விரதம் இருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.- Source: Maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
