முதலாவதாக சந்தைக்கு வரவிருக்கும் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

0


சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கும் நிலையில், மேலும் இரு நிறுவனங்கள் இதுபோன்ற ஸ்மார்ட்போனினை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #smartphone

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சியோமி மற்றும் ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.


சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2019-இல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எK்ஸ் என அழைக்கப்படலாம் என்றும் சமீபத்தில் வெளியான தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஃப் என அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங்கை தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியான நிலையில், சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இருநிறுவனங்களும் சீன நிறுவனங்களிடம் இருந்து மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எல்ஜி நிறுவனமும் விநியோகம் செய்யலாம் என கூறப்படுகிறது. சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளிப்புறம் மடிக்கும் படி வடிவமைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் உள்புறம் மடிக்கக்கூடிய வடிவமைப்பை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒப்போவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எம்மாதிரியான வடிவமைப்பு கொண்டிருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.


சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை. எனினும் சியோமி மற்றும் ஒப்போ நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படுகின்றன. சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் போட்டி நிறுவன மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. #Xiaomi #smartphone

Leave a Reply