வறுமை நீங்க பைரவருக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

ஜாதகத்தில் பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அந்தந்த பிரச்சனைகளுக்கு உகந்த பரிகாரங்களை பைரவருக்கு செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

பைரவர் வழிபாடும் – தீரும் பிரச்சனைகளும்
நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்க

பைரவருக்கு தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கி, நெய்தீபம் ஏற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

குழந்தைப் பேறு கிடைக்க

தேய்பிறை அஷ்டமி திதியில் நெய் தீபம் ஏற்றி பைரவருக்கு சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்து ஏழைக் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்.

வறுமை நீங்க

நெய்தீபம் ஏற்றி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பைரவருக்கு வில்வம், அரளி பூவினால் அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கும்.

திருமணம் நடக்கும்

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக் கிழமைகளில் 6 எண்ணை தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைபட்ட திருமணம் கை கூடும். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply