முழுமுதற் கடவுள் விநாயகரைப் பற்றி யாருக்கும் தெரியாத உண்மைகளும் சுவாரஸ்ய தகவல்களும் இதோ..

0

பிரம்மச்சாரியா விநாயகர்?

சித்தி-புத்தி என இரண்டு பெண்களை திருமணம் முடித்த குடும்பஸ்தன் தான் விநாயகர். இவருக்கு சுபா-லபா என இரு மகன்களும் இருகின்றார்களாம்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இவரின் திருமணத்தை கோலாகல திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.. கோயில்களில் அவருக்கு திருமண வைபவமும் நடத்தப்பட்டு வருகிறது.

வலது தந்தம் உடைந்திருக்கும் காரணம்-

விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் குறித்து கேள்வி பட்டிருப்போம். கடும் கோபத்திற்கு முன் உதாரணம் பரசுராம். இவர் கடவுள் சிவ பெருமானின் நண்பனாக இருந்தார். ஒரு முறை ஆழ்ந்த தியானத்தில் இருந்த சிவ பெருமானை பார்க்க வந்த பரசுராமனை காவலில் இருந்த குட்டி பிள்ளையார் உள்ளே விடாமல் தடுத்தி நிறுத்தினார்.

சிவனின் தவ நிலையை அறியாத பரசுராமர், தன்னை உள்ளே அனுமதிக்கவில்லையே என கோபத்தில் கொந்தளித்து தன் கையில் இருந்த கோடாரியை தூக்கி எரிந்தார். அக்கோடாரி சிவபெருமான் அருளியது என்பதை கண்டுக்கொண்ட கணேஷன் அதனை எதிர்த்தும் செயல்படாமல், கீழே விட்டு வீணாக்காமலும் தன் தந்தத்தில் தாங்கிக் கொண்டாராம். இதனால் தான் அவரின் தந்தம் உடைந்ததுக்கான கதை.

துளசி தோன்றிய கதை-

கங்கை நதிக்கரையில் அமர்ந்திருந்த விநாயகர் ஆழ்ந்த தவத்தில் இருந்தபோது, துளசிதேவி என்பவர் அந்தப்பக்கம் சென்றிருக்கிறார். கணேசனின் அழகைக் கண்டு காதல் வயப்பட்ட துளசி தேவி தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கணேஷனிடம் வேண்டிருக்கிறாள். முடியவே முடியாது என விக்னேஷ்வரர் மறுத்து விடவே, ‘நீ விரைவில் திருமண பந்தத்தில் விழுவாய்’ என சபித்தாளாம் துளசி தேவி.

எனக்கே சாபம் விடுகிறாயா… என கோபத்தில் கொதித்த கணபதி நீ தாவரமாக கடவாய்’ என்று சாபம் விட்டாராம். இதனால் வருந்திய துளசி தேவி தவறை உணர்ந்து மன்னிப்பு கோர, சாதாரண செடியாக அல்லாமல் நீ புனிதத்தின் ரூபமாக திகழ்வாய் என்று கூறி அருளினாராம்.

மகாபாரத்தத்தினை எழுதியவர் கணேஷ பெருமாள்-

பாண்டவர்கள், கௌரவர்களின் மூதாதையர் பராசர மகரிஷி. இவரது மகன் வியாசர். மகாபாரத யுத்தத்தை நூலாக எழுத எண்ணிய பராசர மகரிஷி, அதற்கு தகுந்த படைப்பாற்றல் பெற்ற ஒருவரை கொண்டுவருமாறு வியாசரிடம் கூறினாராம். அப்போது வியாசர் பிரம்மனிடம் சரியான ஆளை கண்டுபிடிக்க உதவி வேண்டி காத்திருக்க, அவர் முன் பிரம்மன் தோன்றி கணேஷ பெருமாளை நாடி தவமிருந்தால் தீர்வு கிடைக்கும் என்றாராம்.

அதன்படி வியாசர் தவத்திற்கு கிடைத்த பலனாக கணபதியே எழுதித்தருவதாக முன்வந்தாராம். தன் உடைந்த தந்தத்தை எழுத்தாணியாக மாற்றினாராம். அவ்விதம், மகாபாரதம் வியாசர் எடுத்துக்கூற விக்னேஷ்வரர் கையால் எழுத்து வடிவம் பெற்றதாம்.

ஜப்பானிலும், புத்த மதத்திலும் கணேஷருக்கு வழிபாடு-

புத்தர்களின் வழிப்பாட்டு தளங்களில் விநாயகரின் திருவுருவம் இடம்பெற்றிருக்கிறது. ஜப்பானிலும் பிள்ளையாரின் உருவத்தை வழிபடுகின்றனர்… ஆனால் அங்கு அவருக்கு பெயர் ‘கங்கிடென்’ (KANGITEN) என்பார்களாம். – Source: eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply