இழந்து போன செல்வங்களை அருளும் குபேர பூஜை..!

0

வீட்டில் லட்சுமி, குபேரன் படங்களை பூக்களால் அலங்கரித்து பூஜை செய்யலாம். ஒருசில சிவாலயங்களில் குபேரனுக்கு தனி சன்னதி இருக்கும். அங்கு சென்று வழிபடுவதும் நல்ல பலனை தரும். தீபாவளியன்று கோவில்களில் குபேரனுக்கு பால், இளநீர், தயிர், மஞ்சள் போன்ற 11 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பக்தர்கள் பழங்கள் மற்றும் அபிஷேக பொருட்களை வழங்கலாம்.

தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது தஞ்சபுரீஸ்வரர் கோவில். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோவில்களுள் ஒன்றானஇந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று யாகம் நடைபெறும். அதில் குபேரன் தான் இழந்த செல்வங்கள், சக்திகளை திரும்பப்பெற்ற ஐப்பசி அமாவாசையான தீபாவளியன்று நடைபெறும் மகா குபேர யாகம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

இதில் ஹோம பொருட்கள், பழங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களான திரவியப்பொடி, மஞ்சள் பொடி போன்றவைகளுடன் மகா குபேர யாகத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு தஞ்சபுரீஸ்வரர்-ஆனந்தவல்லி அம்மன், குபேரன், குபேர மகாலட்சுமியை வழிபாடு செய்கின்றனர். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply