
நவராத்திரியில் அம்பிகையை வணங்கி பெண்கள் மட்டும் விரதமிருக்க வேண்டும் என்று இல்லை. ஆண்களும் நவராத்திரி விரதமிருந்து அம்பிகையின் அருளை பெறலாம். நவராத்திரி விரதம் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்க கூடியது.
நவராத்திரியின் சிறப்பே ஒன்பது நாட்களும் வைக்கப்படும் கொலு தான். இந்த கொலுவிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, துர்க்கையிடம் தங்களின் ஆயுதங்களை சக்திகளை எல்லாம் கொடுத்துவிட்டு பொம்மைப் போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைக்கப்படுகிறது. இதே போல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சக்தியின் வடிவம் தான் என்பதை வலியுறுத்தம் விதமாகவும் கொலு வைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
நவராத்திரி நாட்களில் வீடுகளிலும் ஆலயங்களிலும் இரவு ஏழு மணி முதல் ஒன்பதரை மணி வரை தேவியை வழிபாடு செய்ய உகந்த நேரமாகும். நவராத்திரி தினங்களில் கன்யா பூஜை செய்தால் சகல செல்வங்களையும் பெறலாம்.

நவராத்திரி தினங்களில் பகல் பொழுதில் சிவபெருமானை வணங்கி ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெயித்தால் அளவில்லா பலன்கள் கிட்டும். அம்பிகை இசை பிரியை. எனவே தினமும் அம்பிகையை ஒரு பாட்டாவது பாடி வணங்குதல் வேண்டும்.
நவராத்திரி ஒன்பது தினங்களில் வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினம். அன்றைய தினம் ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுபாவாடை தானம் செய்வது நல்லது. நவராத்திரி நாளில் சப்தமி திதியன்று ஹயகிரிவிரை வணங்குதல் வேண்டும்.
விஜய தசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரத்தடியில் பெருமாளை எழுந்தருள செய்து பூஜை செய்வார்கள். அதில் கலந்து கொண்டு வழிபட்டால் கிரக தோஷம் விலகி விடும். – Source: webdunia
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
