வீட்ல ஊறுகாய் பாட்டில் நிறைய இருந்தா பணம் கொட்டுமாம்… இத படிங்க புரியும்..

0

எவ்வளவு தான் கஷ்டப்பட்டு கைநிறைய சம்பாதித்தாலும் பணப்பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்க இயலாது.

அதிலும் நிறைய பேருக்கு என்ன செய்தாலும் பணம் கையில் தங்குவதேயில்லை.

சம்பாதிக்கும் பணத்தினை சேமித்து வைத்து சிறக சிறுக செலவு செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு செலவு மொத்தமாக வந்து, வீட்டில் இருக்கும் கஜானாவை காலி செய்துவிடுகிறது.

கை நிறைய சம்பாதித்து பணத்தினை ஒருபக்கம் சேமித்து வைத்தாலும், மறுபக்கம் ஆன்மீக வழிகளையும் கொஞ்சம் பின்பற்றினால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த பத்து விஷயங்களைத்தான்…

வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும்.

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்

வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர்.

எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.

வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.

பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் . 45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.

பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.
– Source: eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply