ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்.

0

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக திறைசேரியின் அனுமதியைப் பெற்றதன் பின் இரண்டு கட்டங்களாக இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியின் காரணமாக திறைசேரி பணம் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதிய பணிக்கொடைக்காக ஏராளமானோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply