சந்தைகளில் மரக்கறிகளின் விலை குறைப்பு.

0

இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் தளம்பல் நிலையில் உள்ளன.

தற்போதைய நிலவரம்படி காய்கறி சந்தையில் கறிமிளகாய் தவிர மற்ற காய்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் மொத்த விலை 750 முதல் 800 ரூபா வரை பதிவாகியுள்ளது.

தம்புள்ளையில் கறிமிளகாயின் மொத்த விலை 600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும்,பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 300 முதல் 320 ரூபா வரை பதிவாகியுள்ளது.

இதேவேளை தம்புள்ளையில் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 260 ரூபாவிற்கும் குறைவான விலையில் பதிவாகியுள்ளமையும் விசேட அம்சமாகும்.

Leave a Reply