அத்தியாவசிய பொருட்களின் விலைகள்.

0

அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பில் நுகர்வோருக்கு அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நிர்ணய விலைக்குட்பட்ட பொருளை வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானியை பிரசுரித்துள்ளது.

அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட பொருட்கள் வர்த்தகர்களினால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதனை ஆதாராத்துடன் முறைப்பாடு செய்தால், முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படும்.

உரிய முறைப்பாடு பரிசீலனை செய்யப்பட்டு வர்த்தகர் தவறிழைத்திருப்பாராயின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனினும் நிர்ணய விலைக்கு உட்படாத பொருட்களின் விலை தொடர்பில் உற்பத்தியாளர்களே விலையை நிர்ணயிப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply