தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும்.

0

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கிறது.

நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

சிறிது நேரம் ஓய்வதும் மீண்டும் கொட்டி தீர்ப்பதுமாக தொடர்கிறது.

மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிவடைந்த பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை.

ஓரளவு தண்ணீர் தேங்கி னாலும் மழை ஓயும்போது வடிந்து விடுகிறது.

ஆனால் உட்புற சாலை கள், தெருக்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

மோட்டார் கள் மூலம் அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், செங்குன்றம், பூந்தமல்லி, மணலி, மாதவரம் உள் ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.

சிறு சிறு கால்வாய்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அந்த தண்ணீர் சாலைகளை சூழ்ந்தது.

சென்னையை பொறுத்த வரை 32 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 1-ந் தேதியன்று அதிகமழை பெய்துள்ளது.

அதாவது நுங்கம்பாக்கத்தில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இதே நாளில் 13 செ.மீட்டரும், 1964-ம் ஆண்டு 11 செ.மீட்டரும் மழை பெய்து இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் மிதமானதா கவும், சில இடங்களில் கன மழையாகவும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply