தொங்கு பாலம் விபத்து: சுப்ரீம் கோர்ட்டில் 14-ந்தேதி விசாரணை.

0

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், நாட்டில் உள்ள பழமை வாய்ந்த பாலங்களை தணிக்கை செய்யக் கோரியும் வக்கீல் விஷால் திவாரி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

வருகிற 14-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

Leave a Reply