கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் (01.11.2022) 24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 170,000 ரூபாவாக உள்ளது.
அதேவேளை 22 கரட் (ஆபரண தங்கம்) 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 157,250 ரூபாவாக பதவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை நேற்றைய தினம் (31.10.2022) 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 158,700 ரூபாவாகவும், 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 170,000 ரூபாவாகவும் கொழும்பு செட்டியார்தெருவில் பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த வாரம் 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 161,000 ரூபாவாகவும், 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 175,000 ரூபாவாகவும் செட்டியார்தெரு பகுதியில் பதிவாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



